கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்புத்தூரில் இருப்பவனே - எங்கள்தீராத வினைகளைத் தீர்ப்பவனேகருப்பா சங்கிலிக் கருப்பய்யா - எம்மைகாப்பது உன் தன் பொறுப்பய்யாதிருப்புத்தூர் நோக்கி வருகின்றோம் உன்திருநாமம் என்றும் சொல்கின்றோம்கருப்பா சங்கிலிக் கருப்பய்யா - எம்மைகாப்பது உன்தன் பொறுப்பய்யா!ராங்கியம் நோக்கியும் சொல்கின்றோம் - என்றும்ராப்பகல் உன்புகழ் சொல்கின்றோம்கருப்பா சங்கிலிக் கருப்பய்யா - எம்மைகாப்பது உன்தன் பொறுப்பய்யா!ஆடித் திங்கள் வெள்ளியிலே - உனக்குஅங்கிகள் பூட்டி வணங்கிவாரோம்!கருப்பா சங்கிலிக் கருப்பய்யா - எம்மைகாப்பது உன்தன் பொறுப்பய்யா!பாதங்கள் தேய நடந்துவாரோம் - உன்திருபாதங்கள் காண ஓடிவாரோம்கருப்பா சங்கிலித் கருப்பய்யா - எம்மைகாப்பது உன்தன் பொறுப்பய்யா!முப்பிலி கொடுத்து கும்பிடுறோம் - உனக்குமுறையாய்ப் படையல் செய்திடுறோம்கருப்பா சங்கிலித் கருப்பய்யா - எம்மைகாப்பது உன்தன் பொறுப்பய்யா!அனைவரும் சேர்ந்தே உன்பாதம் - என்றும்அனுதினம் நாளும் பணிந்துவாரோம்கருப்பா சங்கிலிக் கருப்பய்யா- எம்மைகாப்பது உன்தன் பொறுப்பய்யா!குதிரையின் மேலே அமர்ந்துவர - இருகுதிரைகள் செய்து மகிழ்ந்து வாரோம்கருப்பா சங்கிலிக் கருப்பய்யா - எம்மைகாப்பது உன்தன் பொறுப்பய்யா!