கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சங்கிலிக் கருப்பனே சாம்பிராணி வாசனேசகமாளும் என் ஐயனேஅழகான கொண்டையும் அகண்ட பெருநெற்றியும்அதிரூப மான வடிவம்மதி போன்ற முகமும் மாலைகள் அணிமார்பும்மலர்ந்த உன் பார்வை யழகும்துடுக்கான மீசையும் எடுப்பான தோள்களும்துடிக்கின்ற வாளின் ஒளியும்கருப்புநிறக் கச்சையும் காலில் சலங்கையும்கருணை பொழிகின்ற திறமும்கண்ணனே மாயனே கார்முக வண்ணனேகண்டவர் மெய் சிலிர்க்கும்ஊதாரியாகி பல ஊரெல்லாம் சுற்றியும்உன்னை நான் மறக்கவில்லைகையெலாம் நோகவே கடுமையாய் பணிசெய்தும்கவலைவிட் டகல வில்லைநாடெல்லாம் சுற்றி நான் மாடாக உழைத்துமேநன்மையது சேர வில்லைநெஞ்சார உன்னை நான்நேசித்து வாழ்கிறேன்நின் கருணை கிட்டவில்லைகுலதெய்வ மென்றுனைக் கொண்டாடி மகிழ்ந்தாலும்குறைகளது மறைய வில்லைபொல்லாத ஆசையால் புரியாத கவலையால்பேதை நான் வாடுகின்றேன்எக்காலமும் உன்னை ஏற்றியே தொழுகின்றஏழைக் கிரங்கி அருள்வாய்கோடானு கோடிபிழை செய்யினும் நீ என்னைகொண்டாதரிக்க வேணும்வறுமையதில் வாடாமல் வஞ்சமனம் இல்லாமல்வாழவழி சொல்ல வேணும்அன்புக்கு என்று மெனை அடிபணிய வைத்துநீஆட்கொண்டு அருள வேணும்அதிகாரம் கண்டு நான் அஞ்சாமல் வாழ்ந்துஅருங்கழல் சேர வேணும்பிள்ளை நான் உந்தனது பாதார விந்தமதைபிரியமுடன் வணங்க வேணும்எனது குலம் முழுவதும் உனதடிமை ஆனபின்இரங்காதிருக் கலாமோகவலையைச் சொல்லுமென் கண்ணீரைப் பார்த்துநீ கல்லா யிருக் கலாமோகாத்தருளும் தெய்வமுன் கருணையில்லா விடின்கதி என்ன ஆகு மய்யாதஞ்சமென்று உனை நம்பி வந்தவர் தமக்கெல்லாம் தயை புரிய வேணுமையாகருப்பா என்றுனைக் கரங்கூப்பி அழைத்திட்டால் காக்க வர வேணுமய்யா.