பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
ஊத்துக்கோட்டை:ஏகாத்தம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.வாணியஞ்சத்திரம் அடுத்த, கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ளது, ஏகாத்தம்மன் கோவில். கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும், பொங்கல் வைத்தல், சீர் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. இதில் வாணியஞ்சத்திரம், கன்னிகாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி தீமிதித்தனர். பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.