ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே, திருப்புல்லாணி அகோபில மடத்தில் 60 நாள் நடக்கும் சாதுர்மாஸ்ய சங்கல்பம் நேற்று துவங்கியது. இந்த விரதத்தை, 45ம் பட்டம் ஜீயர் நாராயண யதீந்திர மகாதேசிகன் மற்றும் 46ம் பட்டம் ஜீயர் ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் ஆகியோர் துவங்கி வைத்தனர். இதற்காக, இந்தியா முழுவதும் உள்ள வைணவ தலங்களுக்கு 10 மாதங்கள் பயணம் செய்து, ஒவ்வொரு பகுதியிலும் விரதத்தை ஆரம்பித்து வைப்பர். தற்போது திருப்புல்லாணி, அகோபில மடத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க மண்டபம், திருச்சி அகோபில மடத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் வைக்கப்பட்டுள் நரசிம்மனையும், லட்சுமி நரசிம்மனையும், ராமானுஜர் தரிசித்த கிருஷ்ணனையும், தினமும் பூஜை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர்.