பதிவு செய்த நாள்
07
ஆக
2015
12:08
ஆர்.கே.பேட்டை:சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு, வரும் 13ம் தேதி பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டையில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தர ராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாதத்தில், பவித்ர உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை, பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு, மேதினி பூஜை, அங்குரார்ப்பணம் நடக்கிறது. 12ம் தேதி காலை 7:00 மணிக்கு, திருமஞ்சனம். 9:00 மணிக்கு யாகசாலை திருவாராதனம், பவித்ர பிரதிஷ்டையும், மாலை 6:00 மணிக்கு, உற்சவர் உள் புறப்பாடும் நடைபெறும்.வியாழக்கிழமை காலை 7:00 மணிக்கு, திருமஞ்சனம். மாலை 6:00 மணிக்கு, மகாபூர்ணாஹூதி, கும்ப புறப்பாடு, அதை தொடர்ந்து, பிரம்ம கோஷம் அனுக்கிரகம் நடைபெறும்.