இருக்கன்குடி கோயில் ஆடி வெள்ளி விழா; கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2015 12:08
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிகடைசிவெள்ளி விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி, தை மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடைபெறும். அன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அம்மன் பக்தர்கள் பொங்கல், அக்னிசட்டி , முடிகாணிக்கை செலுத்தி நேர்த்தி கடன் செலுத்துவர். ஆடி மாதம் வரும் விழாவின் போது உற்சவ அம்மன் ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ நடைபெறும். இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி விழா ஆகஸ்ட் 14ல் நடக்கிறது. இதற்கான விழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது .இதையொட்டி கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றும் நடைபெறுகிறது. இருக்கன்குடி, நத்தத்துபட்டி, கே.மேட்டுப்பட்டி, அப்பனேரி, நென்மேனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஊராட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதை தொடர்ந்து மாலையில் கிராமமக்கள் சார்பில் கோயில் வளாகத்தில் வேப்பிலை கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் ராமமூர்த்திபூஜாரி, உதவி ஆணையர்(பொ) ரோஜாலிசுமதா செய்துள்ளனர்.