பதிவு செய்த நாள்
07
ஆக
2015
12:08
பவானி : பவானி, அம்மாபேட்டை யூனியனுக்கு உட்பட்ட பூதப்பாடி, மொண்டிபாளையத்தில், தன்னாசி முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி, 19ம் தேதி பொங்கல் விழா நடப்பது வழக்கம்.இந்தாண்டு ஆடி, 19ம் தேதி பூதப்பாடியில் சந்தை நடப்பதால், ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு நேற்று பொங்கல் விழா நடந்தது.இதனை தொடர்ந்து, அம்மாபேட்டை, பூதப்பாடி, குருவரெட்டியூர், சிங்கம்பேட்டை, அலங்காரியூர் உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.பவானி டி.எஸ்.பி., ஜானகிராம், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.