ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆக. 15ல் பொது விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2015 12:08
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சுதந்திர தினத்தன்று, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து வழங்கப்படுகிறது. ஆகஸ்ட், 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சிறப்பு வழிபாடும், பொது விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களும், பக்தர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டும், பொது விருந்தில் கலந்து கொள்ள வேண்டும், என்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.