சிங்கம்புணரி : சிங்கம்புணரி முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடந்தது. கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. சிவகங்கை தேவஸ்தான கோயில் கண்காணிப்பாளர் மாணிக்கம்,முறையூர் கிராமத்தினர் முன்னிலையில் தேரடிபூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்தனர். பெரியஆவடை சமேத சொக்கநாதர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர் சுப்பரத்திலும் பவனி வந்தனர். 8 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.இரவு அரசுப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நாடகம் நடந்தது.