பதிவு செய்த நாள்
16
ஜூலை
2011
11:07
திருநெல்வேலி : நெல்லை குறுக்குத்துறை அரசமரத்து விநாயகர் மற்றும் சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.நெல்லை குறுக்குத்துறை அரசமரத்து விநாயகர் மற்றும் சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 13ம்தேதி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, கோபூஜை, தீபாராதனையுடன் துவங்கியது. 9மணிக்கு நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், விநாயகருக்கு பிரசன்ன அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, துவார பூஜை, முதற்கால யாக வேள்வி, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு எந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தது.14ம்தேதி காலை 2ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, திருமுறை பாராயணம், யாத்ராதானம், கடம் புறப்பாடு போன்றவை நடந்தது. 8.25மணிக்கு விமானம், அரசமரத்து விநாயகர் மற்றும் சுந்தர விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.