புதுச்சேரி சொர்ணபைரவர் கோவிலில் விசேஷ மூலமந்திர ஹோமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2015 11:08
புதுச்சேரி: இடையார்பாளையம் ஞானமேட்டில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் விஷேச மூலமந்திர ஹோமம் நடந்தது.
புதுச்சேரி-கடலுார் சாலை இடையார்பாளையம் ஞானமேட்டில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, கடன் நிவர்த்தி, திருமண தடை நீங்க விஷேச பூஜை நடந்தது. அஷ்டமி திதியை முன்னிட்டு நேற்று மாலை 3:00 மணி முதல் சொர்ண பைரவருக்கு விஷேச மூலமந்திர ஹோமம், சிறப்பு அபிஷேகம் அதனை தொடர்ந்து தீபா ராதனை நடந்தது.