பதிவு செய்த நாள்
08
ஆக
2015
12:08
ஊத்துக்கோட்டை: ஆடி மாதத்தின், மூன்றாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில், கூழ் ஊற்றி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடந்த 17ம் தேதி ஆடி மாதம் துவங்கியதிலிருந்து, அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றன.
மூன்றாம் வார வெள்ளிக் கிழமை என்பதால், ஊத்துக்கோட்டை செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின், அம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.