வடலூர் புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2015 12:08
வடலூர்: குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா நடந்தது. விழாவை, கடந்த மாதம் 30ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில்வீதியுலா நடந்தது.
(7ம் தேதி) செடல் திருவிழாவையொட்டி, காலையில் இருந்து பக்தர்கள் செடல் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு 9:00 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளல் நடந்தது. இன்று (8ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. 9ம் தேதி மஞ்சள் நீர்உற்சவம், தீர்த்தவாரி நடக்கிறது.