வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2015 12:08
நெல்லிக்குப்பம்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் வெள்ளிக்காப்பு அலங்கா த்தில் அருள்பாலித்தார்.
நெல்லிக்குப்பம் வரசித்திவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் 108 முறை கோவிலை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார்.
பரம்பரை தர்மகர்த்தாக்கள் நடனசபாபதி, சுந்தரமூர்த்தி உட்பட பலர்கலந்து கொண்டனர். அருள்தரும் ஐயப்பன்கோவிலிலும் சிறப்புபூஜை நடந்தது.