கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சக்தி புற்று மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த 5ம் தேதி காப்புக்கட்டுதலுடன் உற்சவம் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாரியம்மனுக்கு மகா அபிஷேகமும் நடந்தது. கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து அம்மனுக்கு சக்தி அழைத்தல், பூங்கரகம், பால்குடம், முலைப்பாரி, அக்னி கலச சிறப்பு பூஜைகள் நடந்தது.கச்சேரி சாலை, தியாகதுருகம் சாலை வழியாக பக்தர்கள் பலர் ஊர்வலமாக சென்றனர். மாலை 5 மணிக்கு அம்மனுக்கு தீர்த்தக்குடம், பால்குடம் விசேஷ திரவிய அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடந்தது.விழா ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.