சின்னசேலம்: சின்னசேலத்தில் உள்ள ஏரி புற்று மாரியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து வரும் 14ம் தேதி ஊரணி பொங்கல், 15ம் தேதி பால் குட ஊர்வலம், பூச்சட்டி ஏந்துதல், 16ம் தேதி தீமிதித்தல் ஆகிய நிகழ்ச்சிக்கள் நடக்கிறது.