அவிநாசி :மழை பெய்ய வேண்டியும், உலக அமைதிக்காகவும், பூண்டியில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.திருமுருகன்பூண்டியில் உள்ள ஆதிமுத்துமாரியம்மன் கோவிலில் நடந்த, 108 திருவிளக்கு வழிபாட்டின் போது, காசி, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால், அம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. அதன் பின், சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.