பதிவு செய்த நாள்
10
ஆக
2015
12:08
குரோம்பேட்டை: அம்மன் கோவில்களில் ஆடி மாத, தீ மிதி திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.குரோம்பேட்டை, ஜமீன் ராயப்பேட்டையில் உள்ள, படவட்டம்மன் கோவில், தீ மிதி திருவிழா, நேற்று மாலை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அனகாபுத்துார் ஆலவட்டம்மன் கோவில், பம்மல், வீதியம்மன் கோவில், நாகல்கேணி, சபாபதி நகரில் உள்ள, தண்டுகரை ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அம்மனை வழிபட்டனர்.