திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ராமானுஜரின் உஞ்சவிருத்தி ரதயாத்திரை நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூரில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு உஞ்சவிருத்தி ரதயாத்திரை நடந்தது. காலை 8:00 மணிக்கு பிரபந்தசேவையும், காலை 9:00 மணிக்கு திரவுபதியம்மன் கோவிலிலுள்ள பார்த்தசாரதிக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு ராமானுஜர் மற்றும் பெருமாள் படத்தை அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பாகவதர்கள் பஜனைகள் பாடினர். மதியம் 1:30 மணிக்கு திருக்கோவிலூர் ஜீயர் ராமானுஜாச்சாரியாரின் மங்களாசாசனமும், உபன்யாசமும் நடந்தது.ஏற்பாடுகளை புதுச்சேரி, திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சிஷ்யர்களின் உஞ்சவிருத்தி ரதயாத்திரை குழுவினர், முன்னாள் எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.