அய்யனார் கோயிலில் ஆக.27ல் கும்பாபிஷேகம் : ஆலோசனை கூட்டத்தில் முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2015 02:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூர்ண புஷ்கலா சமேத குளங்கரை கூத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருப்புத்தூர் பெரியகண்மாய் கரையிலுள்ள அய்யனார் கோயில் ரூ 70 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பரிவார தேவதைகளுக்கு தனி சன்னதி, 17 அடி உயரத்திலான இரு சேமக்குதிரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் ஆக.,27ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருப்புத்தூர்,தம்பிபட்டி,புதுப்பட்டி கிராமத்தினர் மற்றும் திருப்பணிக்குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஆக.,25 காலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கி, அன்று முதற் கால யாகசாலை பூஜை, இரண்டாவது நாளில்,2,3 யாக சாலை பூஜை,ஆக.,27ல் காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவானது.