பதிவு செய்த நாள்
12
ஆக
2015
11:08
விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு, மதுரை, விருதுநகரிலிருந்து தாணிப்பாறை அடிவாரம் வரை ஆக.,14 முதல் 16 வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குனர் வீரபாண்டி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழா ஆக.,14ல் நடக்கிறது. இதையொட்டி மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையத்தில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், ஸ்ரீவி., அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், காரியாபட்டி, மாவூத்து, வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்தும் 42 சிறப்பு பஸ்கள் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி தாணிப்பாறை அடிவாரம் வரை ஆக.,14 முதல் 16 வரை இயக்கப்படும். பக்தர்களின் எண்ணிக்கையைபொறுத்து பஸ்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.