பதிவு செய்த நாள்
13
ஆக
2015
11:08
கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே, புத்து கருமாரியம்மன் கோவிலில், 8ம் ஆண்டு தீமிதி திருவிழா, வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.கடம்பத்துார் அடுத்த, கசவநல்லாத்துார் ஏரிக்கரையில் அமைந்துள்ள, புத்து கருமாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில், தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு, தீமிதி திருவிழா, வரும் 14ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. பின், 16ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, தீமிதி விழா நடைபெறுகிறது.