பதிவு செய்த நாள்
13
ஆக
2015
11:08
சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று மகா சதசண்டி யாகபூஜை நடந்தது. இக்கோயிலின் ஆடி திருவிழா ஆகஸ்ட் 11ம் தேதி மாலை 3 மணிக்கு அனுக்ஞை, கணபதிஹோமம் பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை கும்ப அலங்காரம், யாகசாலை, சண்டி ஜெப பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5 மணிக்கு பரிவார சுவாமிகள் ஹோமம், கோமாதா பூஜை, சதசண்டியாக வேள்வி ஆரம்பிக்கப்பட்டது. 13 அத்தியாய மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பகல் 11 மணிக்கு சுகாசினி, பிர்மச்சரிய பூஜை நடந்தது. அம்பாளுக்கு மகா அபிஷேகம், அபிஷேக ஆராதனை நடந்தது. மூலஸ்தானத்தில் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினார். ஆயுதப்படை குடியிருப்பு, ஏ.கே.ஆர்., நகர், பனங்காடி ரோடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆகஸ்ட் 14ம் தேதி காலை 9:30 மணிக்கு கோயிலில் சுமங்கலி பூஜையும், மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.