பதிவு செய்த நாள்
13
ஆக
2015
11:08
கீழக்கரை: சேதுக்கரை கடலில் புனித நீராட செல்லும் படித்துறை சேதமடைந் துள்ளது. அந்த இடத்தில் கட்டட கழிவுகளை கொட்டி வைத்து உள்ளதால், நாளை ஆடி அமாவாசைக்கு புனித நீராட வரும் பக்தர்களுக்கு வசதி குறைவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட் பட்ட சேதுக்கரையில் கடற்கரையை ஒட்டி சேதுபந்தன ஜெய வீர ஆஞ்ச நேயர் கோயில் உள்ளது. இங்கு தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் வரும் ஆயிரக்கணக்கானோர் முன்னோர் களுக்கு சங்கல்ப பூஜைகளை நிறை வேற்றிச் செல்வர். நாளை(ஆக.,14) அடி அமாவாசை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு புனித நீராட வர உள்ளனர். அவர்கள் கடலில் நீராடுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட படித்துறை சேதமடைந்து உள்ளது. அதை ரூ.9 லட்சம் செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக வாங்கப்பட்ட செங்கல்கள், ஜல்லி கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள் கடற்கரை ஓரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த சீரமைப்பு பணியும் நடக்காததால் இங்கு வரும் பக்தர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
சிவகங்கையை சேர்ந்த ராம கிருஷ்ணன் கூறுகையில், ""கோயில் எதிர்புறமுள்ள படிக்கட்டுகள், முழுமையாக இல்லை, பெயர்த்து எடுக்கப்பட்ட கட்டட கழிவுகளை கடற்கரை ஓரங்களில் கொட்டி யுள்ளதால், கடலில் நீராடும்போது அவை காலில் குத்தி காயம் ஏற்படுகிறது. ஆடி அமாவாசைக்குள் கட்டட கழிவுகளை அகற்றி, பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் நீராட வசதிகள் செய்து தர வேண்டியதுஅவசியம், என்றார். சேதுக்கரை ஊராட்சித்தலைவர் பி.முனியாண்டி கூறுகையில், ""படித் துறையை கட்டி முடித்து பயன் பாட்டுக்கு கொண்டு வரக் கோரி, கிராம ஊராட்சிகள் இயக்குநரிடம் மனு அளித்துள்ளேன். திருப் புல்லாணி யூனியன் மூலமாக நடக்கும் இந்த பணியை டெண்டர் எடுத்தவரிடமும் தெரிவித் துள்ளேன். விரைவில் பணி துவங்க உள்ளது, என்றார்.