பழநி: நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றுமுதல் பழநி மலைக்கோயிலில் வெளிப்பிரகாரம், வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை, யானைப்பாதைபோன்ற இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு பரிசோதனை செய்தபின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருஆவினன்குடி, கிரிவீதிபாதை, சன்னதிவீதி, பஸ் ஸ்டாண்ட் அடிவாரம் ரோடு போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பும், பழநி-கோவை பை பாஸ் ரோடு, கொடைக்கானல் ரோடு பகுதிகளில் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தபட உள்ளது. டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில்,“ சுதந்திர தினத்தை முன்னிட்டு பழநிகோயில் கிரிவீதி, நகரின் முக்கிய நுழைவுப்பகுதியில் வாகன தணிக்கை செய்யப்படும். இன்று காலை முதல் கூடுதலாக போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்,” என்றார்.