பதிவு செய்த நாள்
14
ஆக
2015
04:08
வேதாரண்யம்: வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில், ஆடி அமாவாசையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, திருமணக் ÷ காலத்தில் உள்ள, வேதாரண்யேஸ்வரரை வழிபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையதும், அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த பெருமையுடையதும், வேதங்கள் பூஜை செய்து, மூடிக்கிடந்த திருக்கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பாடல்கள் பாடி திறந்த பெருமையுடைய ஸ்தலமாகும்.
இத்தகைய பெருமையுடைய ஸ்தலத்தில், ஆடி அமாவாசையையொட்டி, கோடியக்கரையில், ‘ஆதிசேது’ என்னும் சித்தர் கட்டக்கடல் மற்றும், ‘÷ வதநதி’ எனப்படும் சன்னதிக்கடல், ஆகிய இடங்களில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பிதுர்திதி கொடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடினர். பின்னர், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி, திருமணக்கோலத்தில் உள்ள வேதாரண்யே ஸ்வரரையும், துர்க்கை அம்மனையும் வழிப்பட்டனர். மேலும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தி ருக்கோவில் நிர்வாகமும், ஆடி அமாவாசையை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.