புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தெப்பல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடிப் பெருவிழா கடந்த 5ம் தேதி துவங்கியது. கடந்த 14ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தெப்பலில் எழுந்தருளிய அம்மன் , கோவில் குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரும்பை: இரும்பை பால திரிபுர சுந்தரி கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில், அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் சுவாமி வீதியுலா நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, நேற்று நித்ய கல்யாண பெருமாள், ஆண்டாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி, பகவான் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்.