பதிவு செய்த நாள்
17
ஆக
2015
10:08
திருப்பூர்: திருப்பூர் வ.உ.சி., நகரில் உள்ள கவுமாரியம்மன் கோவில், 50 ஆண்டு பழமைவாய்ந்தது. இக்கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று நடந்தது. புதுப்பட்டு சாத்தி, கருவறையில் இருந்த கவுமாரியம்மன் சிலைக்கு கர்ப்பிணி அலங்காரம் செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் கொண்டு வந்த வளையல்கள் பெறப்பட்டு, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டன.சிறப்பு பூஜை முடிந்தபின், அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்கள், கர்ப்பிணி பெண்களுக்கு அணிவிக்கப்பட்டன. அதன்பின், தேங்காய் சாதம், எலுமிச்சை மற்றும் தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை என ஐந்து வகையான சாதம் பரிமாறப்பட்டது.* ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், பூமி நீளா தேவி தாயாருக்கு, 18 திரவியங்கள் மூலம், திருமஞ்சனம், தொடர்ந்து வீதி உலா நடந்தது. ஸ்ரீஆண்டாள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொடி மரம் முன், சந்தனத்தில் ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. "ஆண்டாள் காட்டிய பக்தி நெறி என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது.
* ராயபுரம் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிலிலும், ஆடிப்பூர விழா நடைபெற்றது; ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், கருணாம்பிகை அம்மனுக்கு, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது; பின், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.* மடத்துப்பாளையம் ரோடு, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி பூஜை நடைபெற்றது; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. சுமங்கலி பெண்களுக்கு, வளையல், மஞ்சள் துணி வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு, அன்னதானம் நடந்தது.* பழங்கரை பகவதி தேவநாயகி அம்மன் கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வேத பாராயணம் நடைபெற்றது. இதையொட்டி, திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* குரு க்ருபா பக்த ஜன சபா சார்பில், ராதா திருக்கல்யாண உற்சவம், சின்னைய கவுண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி, உஞ்ச விருத்தி எடுக்கப்பட்டு, சிறப்பு பூஜை, வழிபாடுகளுடன் ராதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பூஜைகளை, சேரன்மகாதேவியை சேர்ந்த வேங்கடேஸ்வர பாகவதர் குழுவினர் மேற்கொண்டனர்.