பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே புத்துமாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் புத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி ஐந்தாவது வெள்ளியையொட்டி ஊஞ்சல் உற்சவம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. அதையொட்டி புத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. பு.முட்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்று பூஜை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகாத்தா சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.