புதுச்சேரி: புனித விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு தேர்பவனி நடந்தது. நெல்லித்தோப்பு புனித வின்ணேற்பு அன்னை ஆலய, 164ம் ஆண்டு பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் திருப்பலி நடந்து வந்தது. நேற்று முன்தினம், சிறப்பு தேர் பவனி நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 4.30 மணிக்கு திருப்பலி, 8.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு, சிறப்பு தேர்பவனி நடந்தது.