திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2015 12:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சன்னதியில் நேற்று மாலை கோவர்த்தனாம்பிகை எழுந்தருளினார். அம்பாள் முன், வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜைகள் நடந்தன. யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன்பு மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடந்தது.கிரிவலப்பாதை பத்ரகாளியம்மன் கோயிலில் மூலவருக்கு வளையல்கள் அணிவித்து பூஜைகள் நடந்தன. ஐந்து வகை சாதம் படைக்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் மூலவர் விசாலாட்சி அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, கலவை சாதம் படைக்கப்பட்டது.