பதிவு செய்த நாள்
17
ஆக
2015
01:08
திருப்போரூர்: திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் நடந்தது. திருப்போரூர், பிரணவ மலைக்குன்றில் பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடிப்பூர உற்சவம் நடந்தது.இதையொட்டி, பக்தர்கள், காலை, 10:30 மணிக்கு, வேம்படி விநாயகர் கோவிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர், குடங்களில் பால் சுமந்து, கைலாசநாதர் கோவிலை அடைந்தனர். பாலாம்பிகை அம்மனுக்கு, நண்பகலில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். கோவில் செயல் அலுவலர் நற்சோணை உட்பட பலர் பங்கேற்றனர்.