பதிவு செய்த நாள்
18
ஜூலை
2011
11:07
தர்மபுரி: தர்மபுரி அடுத்த புலிக்கரை, பெருமாள் ஸ்வாமி கோவிலில் முதலாம் ஆண்டு கலச பூஜை திருவிழா நடந்தது. பெருமாள் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் முடிந்த ஒரு ஆண்டு நிறைவானதையடுத்து, நேற்று ஸ்வாமிக்கு கலச பூஜை விழா நடந்தது. பூஜையில், மூலவர் கம்ப்ரோஷனம், மஹா திருமஞ்சனம் சாற்று முடிந்து தீபாரதனை தீர்த்த பிரசாதம் விநியோகம் நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் நடந்த விழாவில், பழைய தர்மபுரி, மாங்கரை, கூத்தப்பாடி, பாறையூர், சென்றாயம்பட்டி, போடரஅள்ளி, பட்டகப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பி.டி.ஓ., இராமமூர்த்தி, கடத்தூர் பெருமாள், காவேரி, சுப்ரமணி, முருகன், முனியப்பன், மாலா, விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை நடத்தினர்.