கிள்ளை: கிள்ளை கடைத்தெரு ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. கிள்ளை, கடைத்தெரு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் நாட்டில் அமைதி நிலவி, விவசாயம் செழிக்க, மண்வளம், மழை வளம் சிறக்க வேண்டி கஞ்சிக் கலய ஊர்வலம் நடந்தது. கிள்ளை சிந்தாமணியம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மன்றத் தலைவி மீனாட்சிபாஸ்கர் தலைமை தாங்கினார். மன்றத் துணை தலைவர் ரத்தினவள்ளி சேது, லட்சுமி கலியபெருமாள், இந்திரா ஆனந்த் முன்னிலை வகித்தனர். கஞ்சிக்கலய ஊர்வலத்தை வட்டாரத் தலைவர் ரங்கன் துவக்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. பின்னர் பல்வேறு வழிபாடு களுக்குப் பின் அன்னதானம் வழங்கப்பட்டது.