ஆதிரெத்தினேஸ்வர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2015 10:08
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில், நேற்று ஆடித்திருக் கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இக்கோயில் ஆடிப்பூ ரத்திருவிழா ஆக.,7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக.,15ல் தேரோட்டம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமணகோலத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திர ங்கள் முழங்க, காலை 11.45 மணியளவில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றி யூரில் பூச்சொறிதல் விழா நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பாகம்பிரியாள் தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாணவேடிக்கையுடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அரசு போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.