புதுச்சேரி: பொறையாத்தம்மன் கோவிலில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நேற்றிரவு நடந்தது. புதுச்சேரி தமிழ்த்தாய் நகர் பொறையாத்தம்மன் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த 16ம் தேதி காலை 9:00 மணிக்கு அம்மன் தேர் வீதியுலா நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வரும் 23ம் தேதி மாலை 7:00 மணிக்கு ரத்தவாய் துடைத்தல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ்த்தாய் நகர் மக்கள் செய்துள்ளனர்.