பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குடத் திருவிழா ஆக., 9 ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் மாலை 6 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு மீனாட்சி, காமாட்சி, குமரி அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி, சிவபூஜை, ராஜராஜேஸ்வரி, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் திருவிளக்கு வழிபாட்டிற்கு பின், அம்மன் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.