பதிவு செய்த நாள்
21
ஆக
2015
11:08
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட் தெருவில் ஸத்குரு ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் மஹாகும்பாபிஷேக விழா நடந்தது. கோயிலில் மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. நூதன மஹா கணபதி கோயிலில் கலசங்களுக்கு அர்ச்சகர் சிவானந்த பட்டர் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சத்குரு ஷீரடி சாய்பாபாவிற்கு புனிதநீர், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். ஆலய நிர்மானப்பொறியாளர் பிரசன்னபாலாஜி, பக்தர்கள் ஜெயபிரதீப், மகாதேவன், செல்லப்பாண்டியன், முருகவேல், அருணாச்சலகண்ணன், மருதைமுத்து, டி.எஸ்.பி., உமாமகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. எம்.எம்.பி.டி., டிரஸ்ட் நிர்வாகிகள், வர்த்தகபிரமுகர் முத்துமகேஷ்வரன், டாக்டர் முத்துவிஜயன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். நிர்வாக குழு உறுப்பினர் நம்பெருமாள், ராஜகோபால், பள்ளி செயலர் ஸ்ரீதர், இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் ராமசாமி, பொறியியல் கல்லூரி செயலர் பொன்னுச்சாமி, செயலாளர் ராஜூ, ஆசிரியர் பயிற்சி நிறுவன செயலாளர் தாமரைக்கண்ணன், கலை அறிவியல் கல்லூரி செயலாளர் தாமோதரன், பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர் ராமதாஸ், தொழிற் பயிற்சி நிறுவன செயலாளர் ஸ்ரீதரன், இணைச்செயலாளர் பெருமாள்சாமி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினர்.