பதிவு செய்த நாள்
21
ஆக
2015
11:08
பெங்களூரு: ஸ்ரீராமபுரம் பாஷ்யம் நகர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில், இன்று, ‘ஜீரணோத்தாரண அஷ்டபந்தன நுாதன பைரவர் பி ரதிஷ்டாபன கும்பாபிஷேகம்’ நடக்கிறது. பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பாஷ்யம் நகர் சுப்ரமணி சுவாமி தேவஸ்தானத்தில், தாய், தந்தையுடன் இணைந்து, சோமாஸ்கந்த ரூபமாக அருள்பாலித்து வரும் முருகனுக்கு, இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, 4வது கால யாக பூஜை, ஸ்பர்சாகுதி, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், யாக கலசம் புறப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கு மற்றும் கணபதி, துர்க்கை, சோமாஸ்கந்த மூர்த்திகளான சிவன்பார்வதி, முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரஹம், பைரவருக்கு மகா கும்பாபிஷேகம், 11:30 மணிக்கு மேல், சுவாமி தரிசனம், மாலை, 5:00 மணிக்கு நன்கொடை செய்தவர்கள், உபயதாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு, 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. கும்பாபிஷேக பிரசாதம், இன்று மாலையில் பெற்று கொள்ளலாம். யாக பூஜையை, பிச்சுமணி சிவாச்சாரியார் நடத்துகிறார். நாளை முதல் அக்டோபர், 8ம் தேதி வரை, 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்கிறது. காலை, 5:00 மணிக்கு அபிஷேகம், மாலை, 5:00 மணிக்கு விசேஷ பூஜை, இரவு, 8:00 மணிக்கு மஹா மங்களாரத்தி நடக்கிறது. ஆலய அர்ச்சகர் ரமணி சிவாச்சாரியார் தலைமையில், ஐயப்ப சிவாச்சாரியார், நடராஜ சிவம், அஸ்வத்தாமசிவம் செய்கின்றனர்.