பதிவு செய்த நாள்
21
ஆக
2015
11:08
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், மகா கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது. இரு நாட்களுக்கு முன், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பிரசன்ன கணபதி ேஹாமம், துர்கா ேஹாமம், வாஞ்ச கல்ப கணபதி பூஜை, வாஸ்து ேஹாமம் உட்பட பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, அஸ்வ பூஜை, கஜபூஜை, முளைப்பாரி ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. அங்கரிக்கப்பட்ட யானை, குதிரை மற்றும் பசுவுடன், பக்தர்கள், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். மாலை, யாக சாலை பிரவேசம், முதற்கால யாகம், சயனாதி வாசம், முதற்கால யாக நிறைவு, தீபாராதனை ஆகியவை நடந்தன. இன்று காலை, 5:00 மணியளவில், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 7:30 மணியிலிருந்து 8:00 மணிக்குள் மகா கும்பாபிேஷகம், 8:15 மணிக்கு, இரண்டாம் கால யாகம் ஆரம்பம், மதியம் 12:00 மணிக்கு, கோபுர கலச ஸ்தாபிதம், 1:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி நிறைவு, மாலை 4:00 மணிக்கு, யாக மண்டப பூஜை, மூன்றாம் கால யாக நிகழ்ச்சி, இரவு 9:00 மணிக்கு, மூ ன்றாம் கால யாக நிறைவு ஆகியவை நடக்கின்றன. கும்பாபிேஷகத்தில், பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.