பதிவு செய்த நாள்
21
ஆக
2015
12:08
திருவள்ளூர்; விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, கருட சகஸ்ரநாமம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, கருட சகஸ்ரநாமம் நடந்தது. இதையொட்டி, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, காலை 7:00 மணி முதல், 7:30 மணி வரை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. இதில், திருவள்ளூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.