வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், 100 ஆண்டு பழமையான மடத்துக்கடை செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2003ல் கும்பாபிஷேகம் நடந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திருப்பணி செய்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. டாக்டர் ஜே.சி.சேகர் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜசேகர், பேரூராட்சி துணைத் தலைவர் பாலசுப்பிரமணி, தி.மு.க., நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர். கோயில் தலைவர் காயாம்பு, செயலாளர் சவடமுத்து, பொருளாளர் காளியப்பன், நிர்வாக கமிட்டி தலைவர் பெரியசாமி, துணைத்தலைவர் தியாகராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.