தென்காசி : தென்காசி எக்லாதேவியம்மன் கோயிலில் இன்று (19ம் தேதி) கொடை விழா துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.தென்காசி அணைக்கரை தெரு எக்லாதேவியம்மன் கோயிலில் இன்று (19ம் தேதி) கொடை விழா துவங்குகிறது. காலையில் சிறப்பு தீபாராதனை, இரவு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வரும் 25ம் தேதி வரை இரவு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கிறது. 26ம் தேதி காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, மகா அபிஷேகம், மதியம் உச்சிக்கால பூஜை, மாலையில் முளைப்பாரி ஊர்வலம், இரவு முழுக்காப்பு அலங்காரம், பூஜை, சித்ரா நதியிலிருந்து ஆசாரக்கும்பம் எடுத்து வருதல், நள்ளிரவு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு படப்பு படையலிட்டு கொடை விழா பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடேஷ் மற்றும் விழா கமிட்டியார் செய்துள்ளனர்.