பதிவு செய்த நாள்
19
ஜூலை
2011
11:07
குரும்பூர் : குரும்பூர் அருகே உள்ள மைக்கண்நாடார் குடியிருப்பு முத்துவிநாயகி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகவிழா நடந்தது.விழாவையொட்டி மாக்காப்பு பூஜை, லட்சார்ச்சனை, நவக்கிரஹஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம் நடந்தது. பின்னர் அம்மனுக்கும் பரிவார தேவதைகளுக்கும் அபிஷேகம், கும்பாபிஷேகம், அன்னதானம் நடந்தது.கோயில் நிர்வாக தலைவர் கணேசன், குரும்பூர் நாடார் வர்த்தக மகமை சங்க செயலாளர் செல்வராஜ், துணைச்செயலாளர் டேவிட், குரும்பூர் சுற்று வட்டார நாடார் வியாபாரிகள் இளைஞர்கள் ஐக்கிய சங்க தலைவர் கி÷ஷாக் முருகானந்தம், நல்லூர் பஞ்., தலைவர்(பொறுப்பு) ஜெயராஜ், உதவியாளர் சுடலைமுத்து, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்., தலைவர் கார்மேகம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.