பெண்ணாடம்: அரியராவி திரவுபதியம்மன் கோவிலில், அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. பெண்ணாடம் அடுத்த அரியராவி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, வியாசர் பிறப்பு, தாள் கலசம் எடுத்தல், திருதராஷ்டிரன் பிறப்பு, பீமன் நாகலோகம் சென்று நாகராஜனை சந்தித்தல், அர்ச்சுனர் வில் வளைக்கும் நிகழ்ச்சி, ஊரணிப் பொங்கல் நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வாக நேற்று (21ம் தேதி) காலை 8:30 மணியளவில் அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:30 மணியளவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (22ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், நாளை (23ம் தேதி) போர் மன்னன் பூஜையுடன் திருவிழா முடிகிறது.