ஆறுபடை வீடு நுழைவு வாயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2015 12:08
கிள்ளை: சிதம்பரம் அடுத்த முடசல் ஓடையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர் கோவில் ஆறுபடை வீடு நுழைவு வாயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடக்கிறது. முடசல் ஓடையில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலுக்குச் செல்லும் வழியில் பெரிய ஆர்ச் அமைத்து திருப்பரங்குன்றம், பழமுதிற்சோலை, பழனி, திருத்தணி, சுவாமி மலை மற்றும் திருச்செந்துாரில் கோவில் கொண்ட சுவாமிகளை நுழைவு வாயில் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதிஹோமத்துடன் பூஜை துவங்குகிறது. 27ம் தேதி காலை 9:30 மணிக்கு கோ பூஜை மற்றும் விஷேச பூஜைகளை தொடர்ந்து நுழைவு வாயிலில் மேல் அமைக்கப்பட்ட மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.