பதிவு செய்த நாள்
24
ஆக
2015
11:08
வாலாஜாபாத்: படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், முத்து மாரியம்மன் உற்சவர் சிலைக்கு, நேற்று, மகா அபிஷேகம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி, அருந்ததியர்பாளையம் கிராமத்தில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள முத்து மாரியம்மனுக்கு புதிதாக உற்சவர் சிலை செய்யப்பட்டு உள்ளது. அந்த சிலைக்கு, மகா அபிஷேகம், நேற்று காலை, 9:00 மணி அளவில் நடந்தது. இந்த மகா அபிஷேக உற்சவத்தை முன்னிட்டு, கடந்த 21ம் தேதி, மாலை, 6:00 மணி அளவில், கரிக்கோலம் உற்சவமும்; இரவு, வீதியுலாவும்; நேற்று காலை, 8:00 மணி அளவில், புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலைக்கு கண் திறக்கும் நிகழ்வும்; அதை தொடர்ந்து மகா அபிஷேகத்தில் உற்சவர் சிலைக்கு, புனித நீரும் ஊற்றப்பட்டது. அதை தொடர்ந்து தீப, துாப ஆராதனையும் நடந்தன. இந்த உற்சவர் மகா அபிஷேக விழாவில், படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தை சுற்றியுள்ள கிராமவாசிகள், உற்சவர் முத்து மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.