பதிவு செய்த நாள்
24
ஆக
2015
11:08
சிதம்பரம்: மத்திய பாதுகாப்புப் படை அதிரடிப் பிரிவு கமாண்டோ போலீசார் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர். கோவை மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிரடிப்படை (ஆர்.ஏ.ஃப்) 105 பிரிவு கமாண்டோ போலீசார் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். மத்திய பாதுகாப்பு படை துணைக் கமாண்டர் சவுராசியா, உதவி கமாண்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கொட்டாரி, தலைமை காவலர் குருநாதன் உள்ளிட்ட 70 பேர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் வந்தனர். பின்னர் அவர்கள், நகரின் மக்கள் தொகை, நகரமைப்பு, இ ங்கு ஏற்படும் பிரச்னைகள், தலைவர்கள் போன்ற முக்கிய தகவல்களை சேகரித்தனர். பின்னர் டவுன் இன்ஸ்பெக்டர் லாமேக் உதவியுடன் நடராஜர் கோவிலின் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம், அனைத்து சன்னதிகள், கோவில் மேல் விமான பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் பொதுதீட்சி தர்களிடம் கோவில் பாதுகாப்பு முறைகள், பணியாளர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக கட்டடம், விளையாட்டு மைதானம், நுாலகம் உள்ளிட்ட பிற கட்டடங்கள், விமானத் தளம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பாதுகாப்பு ஆய்விற்காக பிச்சாவரம் சென்றனர்.