செஞ்சி: முக்குணம் முக்குன்றநாதர் கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி அமைப்பதற்கான வாஸ்து பூஜை நடந்தது. செஞ்சி தாலுகா முக்குணம், முக்குன்ற நாதர் கோவிலில், புதிதாக ஆஞ்சநேயர் சன்னதி அமைக்க வாஸ்து பூஜை நேற்று நடந்தது. இதை முன்னிட்டு ஊர்மக்கள் கோவில் கட்டுவதற்கான பொருட்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.