புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 19 ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று காலை 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகமும், மாலை சித்தி, புத்தி சுவாமிக்கு பெண் அழைப்பும், இரவு 9 மணிக்கு மணக்குள விநாயகருக்கு திருக்கல்யாணம், சிறப்பு தீபாரதனை நடந்தது.